இன்றைய நாள் எப்படி? 31.07.2014


31 ஜூலை 2014
தின பலன்

 மேஷம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை


 ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் வரும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்


 மிதுனம்
ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். உடல் நலம் பாதிக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்


 கடகம்
இன்றையதினம் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். அசைவ உணவுகள் வேண்டாமே. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை


 சிம்மம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே


 கன்னி
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும்-. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்


 துலாம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா


 விருச்சிகம்
உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்


 தனுசு
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்


 மகரம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு


 கும்பம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை


 மீனம்
பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment