உலக பொருளாதாரத்தையும் 'எபோலா' அச்சுறுத்துகிறது!!!

எபோலா வைரஸின் வீரியம் தற்போது பொருளாதாரத்தையும் அசைத்துப் பார்க்க ஆரம்பித்துள்ளது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஒருவர் எபோலா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள செய்தி அமெரிக்க பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவனங்கள் தற்போது எபோலா வைரஸ் குறித்து உச்சகட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. 

பயணிகள் மூலம் வைரஸ் காவப்படுகிறதா என்று விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தாலும்இ அவர் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார். 

இந்த வைரஸ் பரவும் அபாயத்தால் பாதிக்கப்படும் மிகப்பெரிய துறைகளில் விமானத்துறையும் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில், எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அந்தச் செய்தி அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தியுள்ளது. எபோலா அச்சுறுத்தல் தற்போது பொருளாராத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என பொருளாதார வல்லுநனர்கள் கூறுகின்றனர். 

ஆபிரிக்காவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள எபோலா வைரஸினால் உலகின் ஏராளமான நாடுகள் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. 

தற்போது அமெரிக்காவிலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள செய்தி, உலகளவில் இதன்தாக்கம் உணரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் 3,300 உயிர்களைக் காவுகொண்டுள்ள எபோலா வைரஸ் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடமும் தொற்றியுள்ளது. 

எபோலா வைரஸ் தொற்றினால் நாடுகளுக்கிடையிலான பயணத்தை தடையை அதிகரிக்கச் செய்வது மட்டுமன்றி மற்றுமொரு உலகப் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியக் கூடிய பரிணாமத்தைக் கொண்டுள்ளது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment