தமிழ் திரையுலகில் எல்லோரிடத்திலும் நட்புடன் இருப்பவர் ஆர்யா. அதிலும் தன்னுடன் யார் இணைந்து நடித்தாலும் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்.
அந்த வகையில் ஆர்யாவின் தற்போதைய க்ளோஸ் பிரண்ட் விஜய் சேதுபதி தான், இவர்கள் கூட்டணியில் பொறம்போக்கு படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த வன்மம் படத்தையும், ஆர்யா நடித்துள்ள மீகாமன் படத்தையும் ஒரே நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு முதலில் வன்மம் படத்தை தான் இந்நிறுவனம் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாம், பிறகு தான் மீகாமன் வருகிறது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment