சென்னையில் உள்ள பிரபல வானொலியில் பணிபுரிந்து வருபவர் பாலாஜி. இவர் நிகழ்ச்சிக்கும் உலகமெங்கும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.குறிப்பாக படங்களை பற்றிய இவர் விமர்சனத்திற்கு ரசிகர்கள் மிக அதிகம்.
ஆனால் சில நாட்களாகவே இவர் இந்த விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்.இதற்கு பிரபல பத்திரிக்கை ஒன்றில் விளக்கம் அளித்த அவர். ‘ஒரு சில படங்களை நான் விமர்சனம் செய்யும் பொழுது, அந்த படத்தை சார்ந்த பலர் என்னை தொடர்பு கொண்ட மிரட்டினர், என்னால் தான் அந்த படமே ஓடாதது போல் அவர்கள் எண்ணினர், பின் அந்த நிகழ்ச்சியை நிறுத்தினேன்.
ஆனால் சமீபத்தில் வந்த படங்களை இணையத்தளத்தில் கிண்டல் செய்வதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை, உலகிற்கு பொதுவான விஷயங்களில் அவங்க அதிகாரத்தைச் செலுத்த முடியாது. அதுவும் 10 லட்சம் மக்களோட கருத்துகளில் அவங்க ஆதிக்கம் செலுத்த முடியாது.
தான் சொல்லறது மக்களை சென்றடைய ஒருவர் டி.வி, ரேடியோ, பத்திரிக்கையில் இருக்க வேண்டியதில்ல. சாதரண மனிதனாக இருந்தால் போதும்’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment