நீ என்ன பொட்டபுள்ளயா? வெட்கி தலைகுனிந்த பெண்

மாவீரன் நெப்போலியன் சாதாரணப் படைவீரனாக இருந்த சமயம், அவனும் மற்ற படைவீரர்களும் ஒர் இடத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.

அங்கிருந்த வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே வந்து உல்லாசமாகப் பொழுதை கழித்தனர்.

நெப்போலியன் மட்டும் பொழுதை வீணாக்காமல் கூடாரத்தில் அமர்ந்து நூல்களைப் படித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கிராமப் பெண் ஒருத்தி, எல்லோரும் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கின்றனர், நீ என்னவோ பொட்டபுள்ள போல் உள்ளேயே இருக்கிறாயே என்று ஏளனம் செய்தாள்.

நெப்போலியனோ புத்தகத்தில் இருந்த கண்களை எடுக்கவேயில்லை, சற்று நேரம் அங்கு நின்றுவிட்டு நெப்போலியனிடமிருந்து எவ்வித பதிலும் வராததால் உதட்டைப் பிதுக்கிவிட்டு சென்றுவிட்டார்.

வருடங்கள் உருண்டோடின, நெப்போலியன் பிரான்சின் சக்கரவர்த்தி ஆனார், அந்த ஊருக்கு ஒரு முறை வந்த போது அந்த பெண்ணை பற்றி நினைவு வந்தது, அந்த பெண் இருக்குமிடம் சென்று அம்மா என்னைத் தெரிகிறதா என்றார்.

நான் ஒரு காலத்தில் இந்த ஊரில் சாதாரண படைவீரனாக கூடாரத்தில் உட்கார்ந்திருந்தேன், நீ கூட என்னை பொட்ட புள்ள என்று கேலி பண்ணினாய், அன்று நான் மற்றவர்களை போல் விளையாடிக்கொண்டிருந்தால் இன்றும், அவர்களை போல் இருந்திருப்பேன் என்றார்.

வெட்கித் தலைகுனிந்தாள் அந்தப் பெண்!
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment