இரண்டாம் உலகப்போரின் போது மரணித்த ஜேர்மானிய வீரர்ளின் சடங்களை 70 ஆண்டுகள் கழித்து தொல்லியல் நிபுணர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது இறந்த வீரர்களின் உடல்கள் தற்போது க்ளெஸ்ஸின் என்ற இடத்தில் தொல்லியல் நிபுணர்கள் குழு ஒன்றால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அந்த தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களில் பலர் தங்கள் கைகளில் ஆயுதம் ஏந்தியும் ஹெல்மட் மற்றும் பூட்ஸ் அணிந்த நிலையிலேயே இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
1945ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் க்ளெஸ்ஸின் எனும் இடத்தில் 3 நாட்களுக்கு நடைபெற்ற இந்த போரில் இவர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களின் உடலில் அவர்கள் அணிந்திருந்த உடைகள் யாவும் அரிக்கப்பட்டு காணாமல் போகியுள்ள நிலையில் அவர்கள் அணிந்திருந்த ஹெல்மட், பூட்ஸ் மற்றும் ஆயுதங்கள் மட்டும் இன்னும் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.







0 comments:
Post a Comment