மைக்குரொசோப்ட் நிறுவனத்தின் அதி உன்னத சேவைகளுள் ஒன்றான Windows Live Messenger எனப்படும் கருத்து பரிமாற்று சேவையை சீனாவில் இடைநிறுத்துவதற்கு மைக்குரொசோப்ட் முகாமை தீர்மானித்துள்ளது.
இதன்படி சீனாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் இந்த சேவையை இடைநிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Windows Live Messenger மைக்குரொசோப்ட் நிறுவனத்தினால் கடந்த 1999ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் பரிணாம வளர்ச்சியின் கட்டமாக Skype அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் Windows Live Messenger இன் பாவனை சீனாவில் குறைவடைந்துள்ளது.
எனினும் Windows Live Messenger இடைநிறுத்தப்பட்ட பின்னர் அதன் சேவைகளை Skype இன் ஊடாக அனுபவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம் Windows Live Messenger சேவையை 330 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment