ஆபாசப் பக்கத்தை ஆரம்பிக்க அனுமதித்த Facebook மீது 123 மில்லியன் டொலர் வழக்கு! பெண் அதிரடி

அமெரிக்கா- Houston, Texas ஐ சேர்ந்த பெண் ஒருவர் தனது பெயரில் ஆபாச படங்களைக் கொண்ட ஒரு சுயவிவர பக்கம் தொடங்கப்பட்டதற்காக பேஸ்புக் மற்றும் இவரது முன்னாள் சினேகிதி ஒருவர் மீது 123-மில்லியன் டொலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது சினேகிதி தனது முகத்தை ஆபாச படங்கள் மீது  போட்டோஷொப் செய்து தனது முழுப்பெயரை உபயோகித்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் என பாதிக்கப்பட்ட மேரியம் அலி கூறியுள்ளார்.

குறிப்பிட்ட கணக்கிலிருந்து நண்பர்கள் குடும்பத்தினர் நட்பழைப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் எச்சரிக்கையானர் என கூறப்பட்டுள்ளது.

அலி பல தடவைகள் பேஸ்புக்குடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட பக்கத்தை நீக்குமாறு கோரியதாகவும், ஆனால் சமூக வலையமைப்பு அதனை செய்ய தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பின் குறித்த பெண் பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு, அவர்கள் புலன்விசாரனை செய்து இடைநிறுத்தியதாகவும் இதற்கு பின்னால் இருந்தது யார் என்பதையும் அடையாளம் கண்டுள்ளனர்.

அலி மொத்த சேதங்களையும் ஒரு வாடிக்கையாளருக்கு 10-சதங்கள் விகிதம் 1.23-பில்லியன் வாடிக்கையாளர் என்ற கணக்கில் இந்தத் தொகையைக் கோருவதற்குத் தீர்மானித்துள்ளார்.

இச்சம்பவத்தால் அலிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சங்கடம் போன்றவற்றிற்கான சேதங்களை பெற அந்த வழக்கு முயற்சிப்பதாத கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. ஆபாசப் பக்கத்தை ஆரம்பிக்க அனுமதித்த Facebook மீது 123 மில்லியன் டொலர் வழக்கு! பெண் அதிரிடி

    ReplyDelete