முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் கீழ்த்தரமான கட்டுரை ஒன்று வெளியானதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான கட்டுரையில் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிட்ட அநாகரீகமான புகைப்படத்தை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கை கடற்படை அத்துமீறி தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்கிறது. இதுகுறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்.
அதை இவ்வாறு கொச்சைப்படுத்துவது முதல்வரை மட்டுமல்ல பிரதமர் மோடியையும் இழிவுப்படுத்துகின்றது.
இதுபோன்ற விஷமத்தனமான விமர்சனங்களில் இனி இலங்கை செயல்படக் கூடாது என்று மத்திய அரசு அறிவுத்த வேண்டும் என்றும் இந்திய அரசு இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை அவமதித்தார்களா? கொந்தளித்த விஜயகாந்த்
ReplyDelete