கடந்த பல ஆண்டுகளாக புவி வெப்பமயமாதல் காரணமாக, பூமியில் இயற்கையின் சமநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அத்துடன் இம்மாற்றங்கள் உலகையே அச்சுறுத்தி வருகின்றன. இதனை தடுப்பதற்கு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் அர்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றார்கள்.
பூமியில் ஒவ்வொரு உயிரினமும் முக்கியமானவை என்பதனை அப்படி இருக்கையில், அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு விடையத்தினை கண்டுபிடித்துள்ளனர். அதாவது நமது காலடியில் ஊர்ந்து திரியும் எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அவர்களின் ஆய்வுகள் வெளிக்காட்டி நிற்கின்றன.
இத்தகைய எறும்புகள், மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட கூறுகளை சிதைப்பதனால், காற்றில் கலந்துள்ள கரியமிலவாயு படிப்படியாக குறைகிறது என்றும் இதன்மூலம், புவி வெப்பமயமாதல் குறைந்து,புவி குளிரும் என்றும் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
புவி வெப்பமயமாதலுக்கு எதிராக போராடும் எறும்புகள்!
ReplyDelete