வட்ஸ் அப் மோகத்தால் வாசிப்பில் ஆர்மிழந்துவரும் இளம் தலைமுறை!

கையடக்கத் தொலைபேசியில் ‘வட்ஸ் அப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வட்ஸ்-அப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது.

காலை நேரங்களில் படிப்பு வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள்கின்றனர்.இணையதள வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் வட்ஸ் அப்- வைபர்- ஹைக் போன்ற குறுஞ்செய்தி செயலி சுலபமாக பயன்படுத்த முடியும்.

இந்த செயலிகளை கையடக்கத் தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம் பேசவும் முடியும் குறுஞ்செய்திகளைத் தவிர புகைப்படங்கள் ஒலியமைப்பு –ஒளியமைப்பு ஆகியவற்றை அனுப்பிக் கொள்ளலாம்.

இதனால் கையடக்கத் தொலைபேசிகளில் அனுப்பும் வழக்கம் கூட தற்போது பெரிதும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. வட்ஸ் அப் மோகத்தால் வாசிப்பில் ஆர்மிழந்துவரும் இளம் தலைமுறை!

    ReplyDelete