ஹொலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!

ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

ஹாலிவுட் நகைச்சுவை நடிகரும் ஆஸ்கர் விருதை மூன்று முறை வென்றவருமான நடிகர் ராபின் வில்லியம்ஸ் (63). இவர், கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார்.

ராபின் வில்லியம்ஸ் கடந்த 1997ல் வெளிவந்த 'குட் வில் ஹான்டிங்' படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர். இந்த படத்தில் அவர் மனகோளாறுகளுக்கு சிகிச்சை தரும் நிபுணராக வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் வில்லியம்ஸ், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பினால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வசீகரித்தவர்.

இந்நிலையில், டிபுரோனில் இருக்கும் தனது வீட்டில் ராபின் வில்லியம்ஸ் மர்ம மான நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்து கலிஃபோர்னியா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. 

மேலும்,  ராபின் வில்லியம்ஸ், மூச்சு திணறல் நோயால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ராபின் வில்லியம்ஸ் மரணத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காலை 11:55 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

அப்போது ஒருவர் சுயநினைவற்ற மற்றும் மூச்சு இல்லாமல் வீட்டில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவசர குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சென்ற குழு அவர் வில்லியம்ஸ் என்று கண்டுபிடித்தது. பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று மதியம் 12:02 மணிக்கு டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர் என்று போலீஸ் தரப்பு கூறப்பட்டுள்ளது.

"என் கணவர் மற்றும் சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது" என்று ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.
மேலும், வில்லியம்ஸ் இறந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment