தமிழில் வெற்றி பட இயக்குநர்களில் பட்டியலில் இயக்குநர் பி.வாசுவும் ஒருவர். தமிழ்- தெலுங்கு- கன்னட மொழிகளில் வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
‘தொட்டால் பூ மலரும்’ படத்தில் தனது மகன் சக்தியை நாயகனாக அறிமுகம் செய்தார். படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து- ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’- ‘ஆட்டநாயகன்’- நினைத்தாலே இனிக்கும்’ உட்பட பல படங்களில் நடிகர் சக்தி நடித்தாலும்- தமிழ் இரசிகர்கள்- சில வாரிசு நடிகர்களை ஓரம் கட்டியது போல் இவரையும் ஓரம் கட்டிவிட்டனர்.
தமிழ் இயக்குநர்கள் சிலர் இவரை அணுகினாலும் தந்தையிடம் கதை சொல்லி அனுமதி வாங்குங்கள் என்ற இவரது அறிவுரையை கேட்டதும் வந்தவர்கள கதை சொல்லாமலே திரும்பிவிடுகின்றனர்.
இதனால் மனம் நொந்துபோன சக்தி தன் தாய் மொழியில் நாயகனாக அறிமுகம் ஆக முடிவு செய்து விட்டார்.
மலையாள இயக்குநர் அனில் கே.நாயர் இயக்கவிருக்கும் ‘ரோசாப்பூ காலம்’ படத்தில் சக்தி நாயகனாக நடிக்கிறார்.
மேலும் இப்படத்தின் படப்பிப்பு ஒக்டோபர் மாதம் கேரளாவில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0 comments:
Post a Comment