இணைய பாவணையில் அமெரிக்காவைப் பின்தள்ளும் இந்தியா!

நடப்பு ஆண்டின் இறுதியில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா பின்னோக்கி தள்ளும் என்று கூகுள் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 50 கோடி இந்திய மக்கள் இணையம் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகமாக இருக்கும்.

இந்த தகவலை ஃபிக்கி பெண்கள் அமைப்பு நடத்திய ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற நிகழ்வில் அவர் தெரிவித்தார். இந்தியாவில் இணைய பயனீட்டாளர்கள் 100 இலட்சம் பேரிலிருந்து 1000 இலட்சம் பேருக்கு வருவதற்கு 10 ஆண்டுகள் சென்றது.

தற்போது ஒவ்வொரு மாதமும் 50 இலட்ச புதிய பயனீட்டாளர்கள் வருகின்றனர் மேலும் இந்தியாவில் பொருட்களை வாங்குவதற்கான தளமாக இணையம் அதிகரித்துக்கொண்டு வருவதாகவும் இவர் சுட்டிக்காட்டினார்.

இன்னும் நான்கு ஆண்டுகளில் அணியக்கூடிய உபகரணங்கள் நூறு கோடி மக்களை சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்.ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் நூறு கோடி மக்களை சென்றடைய எட்டு ஆண்டுகள் ஆனது.

இந்த உபகரணங்கள் மிக விரைவில் உலகம் முழுதும் பிரபலமாகும்” என்று அவர் தெரிவித்தார். இதேவேளை 2020-ஆம் ஆண்டில் 5 பில்லியன் மக்கள் இணையம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment