“தாயே என்னை மன்னித்து விடுங்கள். நான் பிழை செய்துவிட்டேன்” என்று இலங்கை ஜனாதிபதி தமிழக முதல்வரிடம் கோருவதைப் போன்ற சுவரொட்டிகள் தமிழகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக கோயம்புத்தூரில் இந்த சுவரொட்டிகளை காணக்கூடியதாக உள்ளது.
தமது கரங்களை கூப்பிய நிலையில் ஜெயலலிதா முன்னால் மண்டியிட்டு ராஜபக்ச மன்னிப்பு கோருவதைப் போன்று தமிழகத்தில் சில பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் ஜெயலலிதாவையும் இந்திய பிரதமரையும் இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் இந்தியா தமது கடும் கண்டனத்தை வெளியிட்டது.
இதனையடுத்து இலங்கை இதற்காக பகிரங்க மன்னிப்பை இந்தியாவிடம் கோரியது. இதனை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் சுவரொட்டிகள் அமைந்துள்ளன.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தமிழக முதலமைச்சரை கீழ்த்தரமாக சித்தரித்தமைக்காக இலங்கை மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், இவ்வாறான பதாதைகள் இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடிக்கும் எனக் கூறப்படுகிறது.

We are updating : Aachi News, online tamil news, tamil cinema, tamil actors, tamil actresses, astrology, pictures, videos, photo gallery, world news, indian top news, chennai news, கேலரி, ஜோதிடம், தமிழ் வீடியோ, தமிழ சினிமா, கோலிவுட் , நடிகைகள், நடிகர், திரைப் படங்கள், சினிமா, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, கிசுகிசு, சினிமா விமர்சனம், சினி தகவல்கள், தமிழ் செய்தி, செய்தி, india news, tamil news, tamil web site, tamil news site, tamil news, tamil news website, tamil news, news, tamil website, current events, latest news, political news, cinema news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional news India, indian newspaper, indian daily news, indian news online, indian tamil news, puthinam,
ReplyDeleteஇலங்கை அதிபருக்கெதிராக கோம்புத்தூரில் பதாதைகள்!
ReplyDelete