அதிக உடற்பருமன் புற்று நோயை ஏற்படுத்தும்!

உடலின் பருமன் அதிகரிப்பதினால் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும் என பிரித்தானியவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் சுமார் 5 மில்லியன் வயோதிபர்களை இலக்கு வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடலின் பருமன் அதிகரிக்கும் அதே தருணத்தில் ஐந்து விதமான புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கர்ப்பப்பை மற்றும் பித்தப்பை போன்றவற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கும் உடற்பருமன் அதிகரிப்பே காரணம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச நாடுகளில் உடற்பருமன் அதிகரித்துவரும் நிலையில் புற்று நோய் ஏற்படும் சதவீதமும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment