கமல் படத்துக்கு சிக்கல் நீங்குமா?

கமல் படத்துக்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் நீங்குமா என கேள்வி எழுந்துள்ளது.

மோகன்லால்-மீனா நடித்த மலையாள படம் ‘திரிஷ்யம்‘.  இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. மோகன்லால் ஏற்ற வேடத்தை கமல் ஏற்று நடிக்கிறார். 

ஹீரோயின் தேர்வு இறுதி செய்யும் நிலையில் உள்ளது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்குகிறார். தமிழில் கமல் நடிக்கும் இப்படத்துக்கு  ‘பாபனாசம்‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி பின்னணியில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 

பாபனாசத்தில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. அதன் அருகிலும் ஷூட்டிங் நடக்க உள்ளது. இதில் வில்லனாக கலாபவன் மணி நடிப்பார் என்று தெரிகிறது. மலையாளத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் தமிழிலும் அதே வேடத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை உருவாக்குவதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் கதை தனக்கு சொந்தம் என்றும் அதனால் இதை தமிழில் ரீமேக் செய்யக்கூடாது என்றும் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.  விரைவில் இப்பிரச்னை பேசி தீர்க்கப்பட்டுவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment