நாய்க்காக காதலியை விற்கும் இளைஞன்! இணையத்தில் விளம்பரம்

வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு தான் வளர்த்த நாய் பிடிக்கவில்லை என்பதால் வினோதமான விளம்பரம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அவரது நாய் சோக முகத்தோடு காட்சியளிக்கிறது.

அந்த விளம்பரத்தில், என் காதலிக்கு எனது நாயைப் பிடிக்கவில்லை. எனவே நீங்கள் யாராவது வாங்கிக் கொள்ளத் தயாரா?

நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, அவள் என்னுடன் நான்கு வருடமாக இருக்கிறாள். அவளுக்கு விளையாடப் பிடிக்கும், ஆனால் முறையாக பயிற்சி பெறவில்லை.

அவளின் முடி நீளமாக இருக்கும் எனவே அதனை நன்றாக பராமரிக்க வேண்டும். அவளின் விரல்கள் நீளமாக இருக்கும், ஆனால் நகம் வெட்ட பிடிக்காது.

அவளுக்கு பூனை என்றால் உயிர், மேலும் விலை உயர்ந்த உணவை மட்டுமே விருமி உண்பாள்.

நாள் முழுக்க வேலை பார்த்து விட்டு சோர்வாக வீட்டுக்கு வந்தால் கதவருகே வந்து நிற்காது, முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளும்.

அதேசமயம், நீங்கள் மிக சோகமாக இருந்தாலும் கண்டுகொள்ளாது. உங்களைக் கடிக்காதபோதும், நரகம் போல் உங்களை உணர வைத்துவிடும்.

எனவே, யாருக்காவது விருப்பம் இருந்தால், இந்த 30 வயதுடைய, சுயநலமான எனது காதலியை விலைக்கு வாங்கி கொள்ளுங்கள். அப்போது தான் நானும் எனது நாயும் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment