சமந்தா கவர்ச்சியை அதிகரித்தது ஏன்? காரணம் இதுவாக இருக்குமோ?

படு கவர்ச்சியாக நடிக்க தயாராகிவிட்டார் சமந்தா. அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. பாணா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ உள்பட தமிழ் மற்றும் ஆரம்ப கால தெலுங்கு படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார் சமந்தா. 

தற்போது சக ஹீரோயின்கள் போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கு துணிந்து விட்டார். எவ்வளவு ஆடை குறைப்பு செய்கிறாரோ அதற்கு ஏற்ப சம்பளமும் கணிசமாக உயர்கிறதாம். 

அஞ்சான் படத்தில் தொப்புள் பளபளக்க சூர்யாவுடன் கவர்ச்சி ஆட்டம்போட்டு அசத்தியவர், சமீபகாலமாக விழாக்களில் பங்கேற்கும்போதும் தூக்கலான ஆடையில் வந்து இளசுகளை கிறங்கடிக்கிறார். இவரைப்பற்றி இயக்குனர் ராஜமவுலி கூறும்போது,பாஹுபாலி படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யாததற்கு காரணம் அவர் பிஸியாக இருப்பதுதான் என்றார். 

மார்க்கெட் டல்லடிக்கும்போது ஹீரோயின்கள் ஆடை குறைத்து அதிரடி கவர்ச்சி காட்ட முன்வருவார்கள். சமந்தா பிஸியாக இருக்கிறார் என்று இயக்குனர் ராஜமவுலி கூறும் அளவுக்கு நிலைமை இருந்தும் ஆடை குறைத்து நடிக்க ஒப்புக்கொள்வது சம்பளத்தை உயர்த்தவே என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. 

தெலுங்கில் நடிக்கும் அல்லுடு சீனு படத்தில் படுகவர்ச்சியாக சமந்தா நடிப்பதற்கு அதிகபட்ச சம்பளம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அத்துடன் நெம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் சூட்சமும் இதில் அடங்கி இருக்கிறதாம். அதே சமயம் சித்தார்த்துடன் அவருக்கு சண்டை என பேசப்படுகிறது. காதல் முறிவு காரணமாக, கவர்ச்சியாக நடித்து சினிமாவில் தொடர்ந்து நீடிக்க சமந்தா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment