ராஜபக்‌ஷவிற்கு ஒட்டப்பட்ட மரண அஞ்சலி சுவரொட்டி! அதிமுக அட்டகாசம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை இழிவுபடுத்தியதை தொடர்ந்து விதம் விதமான சுவரொட்டிகளையும், பேனர்களைப் போட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவை கிழித்தெடுத்து அட்டகாசம் செய்துவருகின்றனர்.

இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை பற்றி அவதூறு கட்டுரை வெளியானதை தொடர்ந்து,விதம் விதமாக யோசித்து வித்தியாசமான முறையில் பேனர் கட்டியும், போஸ்டர் அடித்தும் அதிமுகவினர் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

இதன் விளைவாக சென்னைக்கு வந்த சிங்கள பிக்குகளுக்கு கடும் பாதுகாப்பு போட வேண்டியதாயிற்று. அதுமட்டுமல்ல சென்னைக்கு விளையாட வந்த இலங்கை வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஒரு போஸ்டரில் ராஜபக்சேவை கழுதை போலவும், முதல்வர் ஜெயலலிதாவை சிங்கம் போலவும் சித்தரித்துள்ளனர். அந்த போஸ்டரில் ”சிங்கத்தை சீண்டிப் பார்க்காதே.. செருப்படி கிடைக்கும் மறவாதே” என்று இருந்தது.

மேலும் அந்த படத்தில் ராஜபக்சேவை கழுதை போல சித்தரித்து அவர் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வேறு இருந்தது. கழுத்தில் மண்டை ஓடு படம் போட்ட சிவப்புத் துண்டும் காணப்பட்டது.

இதேபோல நெல்லைப் பக்கம் போடப்பட்டிருந்த போஸ்டரில் சில்க் ஸ்மிதாவுடன் ராஜபக்சே குத்தாட்டம் ஆடுவது போல போட்டிருந்தனர்.

ஜெயலலிதா காலில் ராஜபக்சே மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது போலவும், ராஜபக்சேவுக்கு மரண அஞ்சலி செலுத்தப்படும் போஸ்டர் போலவும் போட்டு கிழித்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.






Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. ராஜபக்‌ஷவிற்கு ஒட்டப்பட்ட மரண அஞ்சலி சுவரொட்டி! அதிமுக அட்டகாசம்!

    ReplyDelete