நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் இது குறித்து கூறுகையில், தமிழக மக்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளவர் விஜய்.
தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர் தான் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார், எனவே அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2016ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலில் போட்டியிடுப் போவதாகவும், 2020ஆம் ஆண்டு நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்பதாகவும் சீமான் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக இப்போதே சீமான் பிள்ளையார் சுழி போடுகின்றாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மேலும், இலங்கை அரசின் இணையதளத்தில் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்டதை கண்டித்து தமிழ் திரையுலகினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கூட்டணிக்கு நடிகர் விஜயை அழைக்கிறார் சீமான்???
ReplyDelete