தமிழகத்தின் கடலூரில் 54 வயதான பொறியாளர் ஒருவர் 16 வயதான சிறுமியை ரூ. 1.3 லட்சத்திற்கு வாங்கி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பொதுப் பணித் துறையில் வேலைபார்த்து வரும் குப்புசாமி (54) மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டதும், தலைமறைவாகியுள்ளார்.
யூலை 18ம் திகதி, கடலூர் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரியான ராஜேஷ் கண்ணனை சந்தித்த பூதப்பாடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒரு புகார் மனுவை அளித்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக சமூக சேவகியான புவனேஸ்வரி என்பவருடன் அந்த கிராமத்திற்குச் சென்ற ராஜேஷ் கண்ணன் விசாரணையில் ஈடுபட்டு அச்சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு சிறுவர்கள் காப்பகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரான சின்னதுரை மற்றும் மல்லிகாவை தற்போது பொலிசார் கைது செய்ததோடு, ஏஜெண்ட்டாக செயல்பட்ட வேல்முருகன், ஆறுமுகம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் வேல்முருகனும், ஆறுமுகமும் சிறுமியின் பெற்றோரை அணுகி அந்த பொறியாளாருக்கு மகளை திருமணம் செய்து கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
முதலில் மறுத்த அந்த ஏழைப் பெற்றோர் அந்த இருவரும் காட்டிய ஆசையில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
விருத்தாசலம் அருகில் உள்ள ஒரு கோவிலில் கடந்த சனவரி 20ம் திகதி அச்சிறுமியை திருமணம் செய்து கொண்டதோடு, ஒவ்வொரு வார இறுதியிலும் சிறுமியை சேத்தியாதோப்பில் உள்ள தனது வீட்டில் கொடுமை செய்துள்ளார்.
சிறுமியை, குப்புசாமி போதை மருந்துகள் எடுத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுத்தால் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மேலும், குற்றம்சாட்டபட்ட 5 பேரும் குழந்தைத் திருமணச் சட்டம், பாலியல் வன்முறை ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

We are updating : Aachi News, online tamil news, tamil cinema, tamil actors, tamil actresses, astrology, pictures, videos, photo gallery, world news, indian top news, chennai news, கேலரி, ஜோதிடம், தமிழ் வீடியோ, தமிழ சினிமா, கோலிவுட் , நடிகைகள், நடிகர், திரைப் படங்கள், சினிமா, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, கிசுகிசு, சினிமா விமர்சனம், சினி தகவல்கள், தமிழ் செய்தி, செய்தி, india news, tamil news, tamil web site, tamil news site, tamil news, tamil news website, tamil news, news, tamil website, current events, latest news, political news, cinema news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional news India, indian newspaper, indian daily news, indian news online, indian tamil news, puthinam,
ReplyDelete