நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குநர் சரண்!

நடிகர் அஜித்தின் வெற்றி படமன் ‘காதல் மன்னன்” படத்தை இயக்கிய இயக்குநர் சரண் நான்கு வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் “ஆயிரத்தில் இருவர்” என்ற படத்தை இயக்குகிறார். இவர் கடைசியாக 2010-ம் ஆண்டு அஜீத்தை வைத்து “அசல்” என்ற படத்தை இயக்கினார்.

சரண் மூவி பேக்டரி நிறுவனமும்- சங்கர் பிரவீன் சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மூன்று கதாநாயகிகளை அறிமுகம் செய்கிறார். படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் படத்தின் முதல் பார்வையையும் வெளியிட இருக்கிறார்கள். இதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment