அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் Pole Dance என்பது மிகவும் பிரபலம். இந்தவகையான நடனங்கள் ஆடும் பெண்கள் மற்றும் ஆண்கள் மிகவும் ஒல்லியாக, பம்பரம்போல் சுழன்றும், பல சாகசங்களை செய்து கொண்டும் தங்கள் நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் 114 கிலோ எடையுள்ள ஒரு பெண், ஒல்லிப்பெண்களுக்கு சரிசமமாக Pole Dance ஆடி அசத்தி வருகிறார்.
உலகின் மிகவும் குண்டான Pole Dance நடக்காரி என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் இந்தப் பெண்ணுக்கு 29 வயதாகும்.
திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயானவர் இவர். முதல் குழந்தை பிறந்தவுடன் தனது உடல் தன்னை மீறிக்கொண்டு குண்டாக மாறிவிட்டதாகவும், ஆனால் தன்னுடைய Pole Dance பயிற்சியை அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்ததால் அவரால் தற்போது கூட ஒல்லிப்பெண்களுக்கு இணையாக Pole Danceஆட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்.
தலைகீழாக் கயிற்றை பிடித்துக்கொண்டு ஆடுவது உள்பட Pole Danceஇல் உள்ள அத்தனை ரகங்களையும் அசராமல் ஆடி பார்வையாளர்களை அசத்தி வருகிறார். இவர் National Cheerleaders Association All-Star Cheerleader விருதை இரண்டு முறை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடல் எடை அதிகமானாலும், இவருடைய நளினமான நடனத்தை பார்க்க பார்வையாளர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். குண்டு உடலுடன் இவர் ஆடும் ஆட்டத்தை கீழே உள்ள வீடியோவில் நீங்களும் கண்டு ரசியுங்கள்.

114 கிலோ உடலுடன் Pole Dance ஆடி அசத்தும் பெண்!
ReplyDelete