10 வருடம் காத்திருந்தும் கோலிவுட் கைகொடுக்காததால் சோகம் ஆன அபிராமி மீண்டும் வாய்ப்பு கேட்டு தூது அனுப்புகிறார்.
‘வானவில், ‘மிடில் கிளாஸ் மாதவன், ‘சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அபிராமி. கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு கமலுடன் ‘விருமாண்டி படத்தில் நடித்தார்.
அதன்பிறகு அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை மணந்தார். 10 வருட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆக முயன்றார். தமிழ் பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டார்.
மலையாள படமான ‘அபோத்கரி என்ற படத்தில் சுரேஷ் கோபியுடன் தற்போது நடிக்கிறார். ரீ என்ட்ரி பற்றி அவர் கூறும்போது,‘நிறைய ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன். படங்களை ஒப்புக்கொள்வதில் எனக்கு அவசரம் எதுவும் இல்லை. சுரேஷ்கோபியுடன் ஏற்கனவே 3 படங்களில் நடித்திருக்கிறேன்.
தற்போது ஏற்றிருக்கும் வேடம் சீரியஸான கதாபாத்திரம். தவிர ஜெயசூர்யாவுடன் மலையாள படத்தில் நடிக்கிறேன். தமிழ் படம் இதுவரை எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றார்.

0 comments:
Post a Comment