இன்றைய நாள் எப்படி? 03.08.204

ஓகஸ்ட் 03 - 2014

மேஷம்
இன்றைய தினம் கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்


ரிஷபம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு


மிதுனம்
முகப்பொழிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்


கடகம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா


சிம்மம்
இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்


கன்னி
பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே


துலாம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்


விருச்சிகம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனத்தில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு


தனுசு
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்


மகரம்
இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை


கும்பம்
இன்றைய தினம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்து வீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை


மீனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment