வாய் திறவாக் குழந்தை இது!

கனடாவில் பிறந்த ஒரு குழந்தையொன்றுக்கு உலகில் இதுவரை ஏற்படாத விசித்திரமான குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இந்தக் குழந்தை சமீபத்தில் தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியது. ஆனால் அந்த குழந்தை, பிறந்தது முதல் இதுவரை வாயைத் திறக்கவில்லை என்பதுதான் அந்த விசித்திரமான குறைபாடு.

இதுவரை வாய்பேச முடியாத ஊமைக்குழந்தைகள் பிறந்துள்ளன. எனினும், இந்தக் குழந்தைக்கு வாயே திறக்கமுடியாதுள்ளது.

Wyatt Scott  எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் குழந்தை 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தது. பிறந்த குழந்தை அழவில்லை என்பதால் தாதி அந்த குழந்தையின் வாயில் விரலை உள்ளே நுழைக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது அந்தக் குழந்தைக்கு வாய் ஒட்டியிருந்ததைக் கண்ட தாதி அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த ஒருவருடமாக அந்த குழந்தைக்கு குழாய் மூலமாகவே உணவு கொடுத்து வருகின்றனர். 

இதற்கு என்ன தீர்வு, எப்படி இந்த குறையை சரிசெய்யலாம் என்று மருத்துவர்கள் திணறி வரும் நிலையில், இந்த குழந்தைக்கு இன்னும் எத்தனை நாளைக்கு குழாய் மூலம் உணவு கொடுப்பது என்று தெரியாது பெற்றோர் தவித்து வருகின்றனர்.

இந்த குழந்தையின் பெற்றோர் கடந்த மாதம் WhatsWrongWithWyatt.com என்ற புதிய இணையதளத்தை ஆரம்பித்து தன்னுடைய குழந்தையை எப்படி குணப்படுத்தலாம் என்ற ஆலோசனை கேட்டு வருகின்றனர். இதுவரை அவருக்கு ஆலோசனைகள் கூறி 500 மின்னஞ்சல்கள் வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment