மனிதக் கடத்தலில் இந்தியா முதலிடத்தில்!

மனிதர்கள் கடத்தப்படுவது குறித்து ஐ.நா. நடத்தியுள்ள ஆய்வின்படி, தெற்கு ஆசியாவில் இந்தியாவில் தான் அதிகமான மனித கடத்தல்கள் இடம்பெறுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவுக்கான குற்ற அலுவலக ஐ.நா.பிரதிநிதி கிறிஸ்டினா அல்பர்டின் இது குறித்து கூறுகையில், 

''இந்தியா மனித கடத்தல் தளமாக இருக்கிறது. நேபாளம், வங்கதேசம், வளைகுடா நாடுகளில் இருந்து பலரும் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

இவ்வாறு எத்தனை பேர் என்பது துல்லியமாக கடத்தப்படுகின்றனர் என்பதைச் சொல்ல இன்னும் சில ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. கடத்தப்படுபவர்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு தங்களின் தாய்நாடு செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர்.

இதனால், நூற்றுக்கணக்கான வங்க மொழி பேசும் வங்தேச பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வாரு ஆண்டும், தெற்காசிய அளவில் சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 150,000 ஆயிரம் பேர் இவ்வாறு கடத்தப்படுகின்றனர்.

இதில் குறிப்பாக 75 சதவீதம் பெண்கள் ஆவார். கடத்தப்பட்டு விற்கப்படுபவர்களில் 50 சதவீதத்தினர் தொழிலாளர்களாக்கும் நோக்கில் விற்கப்படுகின்றனர். தெற்காசிய நாடுகளில் கிராமப்புற பகுதியினரே இதற்காக இலக்கு வைக்கப்படுகின்றனர்.

மேலும், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இவர்களுக்கு புகலிடம் கொடுத்து பராமரித்து கொள்வது மிக பாராட்டுக்குரியதாகும்.

இந்த நிறுவனங்கள் இந்த பணியை நன்றாக செய்கிறது. மீட்கப்பட்டவர்களை அந்தந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் முறையான நடவடிக்கைகள் என்பது மிக சொற்பமாகவே உள்ளது. இது இன்னும் முழு வீச்சில் வேகப்படுத்தப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment