சயனைட்டுகளில் – பொட்டாசியம் சயனைட்டு -சோடியம் சயனைடு ஆகியவை நச்சுத் தன்மை கொண்டவை . இந்த கனிம உப்பிலுள்ள சயனைட்டு அயனிதான் நச்சுப் பண்புக்குக் காரணம் .
இந்த சயனைட்டை மனிதன் உட்கொண்டவுடன் சயனைட்டு அயனி எளிதில் இரத்த ஓட்டத்தை அடைகிறது.
இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமொகுலோபினோடு ( சுவாச நிறமி ) இணைகிறது குறிப்பாக ஹீமொகுலோபினில் உள்ள இரும்பு அணுக்களோடு இணைவதினால் ஒக்சிஜனை இணைக்கும் திறன் துண்டிக்கப் படுகிறது.
இதனால் சுவாசம் தடைப்பட்டு நின்று விடுகிறது .உடல் உறுப்புகள் அனைத்தும் ஒக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டு இறப்பு உறுதியாகிறது.

0 comments:
Post a Comment