பழுதடைந்த ஏவுகணைகள், உடைந்த செயற்கைக்கோள்கள் என சுமார் 6,000 தொன் கழிவுகள் பூமியை வலம் வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
இவை மணிக்கு சுமார் 28,000 கிமீ வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. விண்கலங்களுக்கும், செயற்கைக் கோள்களுக்கும் இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
1996 ஆம் ஆண்டில் விண்வெளிக் கழிவுப்பொருளுடன் மோதியதால் பிரெஞ்சு செயற்கைக்கோள் ஒன்று சேதமுற்றது.
இதே போன்று 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செயற்கைக் கோள் ஒன்று, ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயற்கைக் கோள் ஒன்றுடன் மோதியதில் அழிந்தது.
2007 ஆம் ஆண்டில் சீனா, தான் ஏவிய செயற்கைக்கோள் ஒன்றை சோதனைக்காக ஏவுகணை மூலம் மோதிச் சேதப்படுத்தியதில், அச்செயற்கைக்கோள் ஒன்றரை லட்சம் சிறிய துண்டுகளாக விண்வெளிக் கழிவுகளில் சேர்ந்தது.

0 comments:
Post a Comment