கதாநாயகனாக விக்ரம் தனது படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் விஜய் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,
‘சைவம்’ படம் வெற்றிகரமாக ஓடுகிறது. பல தரப்பில் இருந்தும் இதற்கு பாராட்டுகள் வந்தன. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் பார்க்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு நல்ல கதை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு மேலும் அதிகமாகியுள்ளது.
விக்ரம் பிரபுவின் படம் சிறந்த காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது'' என அவர் கூறினார்.
இந்த படத்தை லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்.

0 comments:
Post a Comment