விஜய்க்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர் ரசிகர்கள் முன்னிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்த நிலையில், அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் நெருங்கிய நண்பர் மற்றும் விநியோகஸ்தர் அன்பு சூர்யாவை அழைக்கும் போது ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை சூர்யாவும் மறுக்காமல் சிரித்துக்கொண்டே மேடை ஏறினாராம், மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பரே இப்படி சொன்னது “இளைய தளபதியை” மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
முன்பு தான் அனைத்து நடிகர்களும் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவரே, அவர் ரஜினி மட்டும் தான் என்று சொல்வார்கள், ஆனால் தற்போது எல்லோருக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.
இதற்கிடையே அவரவர் ரசிகர் மன்றங்கள் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த சர்ச்சைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.

0 comments:
Post a Comment