''கத்தி'' இறுதிக்கட்டப் படப்பிடிப்பில்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துவரும் படம் 'கத்தி'. 'அழகிய தமிழ் மகன்' படத்திற்குப் பிறகு கதிர், ஜீவா என்ற இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் படம் இது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடித்த 'துப்பாக்கி' படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் இடம் பிடித்தது. இதன் காரணமே அதே கூட்டணியால் உருவாகி வரும் இந்த 'கத்தி' படத்திற்கும் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

படத்திற்கு இசை அனிருத். விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் 'கத்தி' படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில் எப்படியும் படத்தை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் .

தற்போது சென்னையில் நடந்து வரும் 'கத்தி' படத்தின் படப்பிடிப்புகளில் விஜய் இல்லாத காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் இன்னும் 10 -15 நாட்களில் முடிந்துவிடும் எனவும் படத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment