லிங்கா படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழுந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினிக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சிங்கப்பூர் ஆஸ்பத்திரிக்கு சென்றும் சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால், சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
ரஜினிக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சிங்கப்பூர் ஆஸ்பத்திரிக்கு சென்றும் சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால், சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
உடல் நிலை பூரண குணமான பின்பு கோச்சடையான் படத்தில் நடித்தார். இது அனிமேஷன் படம் என்பதால் கடுமையான உடல் உழைப்புக்கு அவசியம் இல்லாமல் போனது. பெரும் பகுதி படப்பிடிப்பும் ஸ்டுடியோக்களிலேயே நடந்தது.
இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் ‘லிங்கா’ பட வேலைகளை துவக்கினார். இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தனர். தற்போது ஐதராபாத்தில் உள்ள மோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினி, அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, சந்தானம் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இரு தினங்களாக சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. வில்லன்களுடன் ரஜினி ஆக்ரோஷமாக மோதுவது போல இக்காட்சிகளை எடுத்தனர். அப்போது, ரஜினி திடீரென மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தனது பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
ரஜினிகாந்துக்கு உடல் நிலை சரி இல்லை என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை. ரஜினி பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். ‘லிங்கா’ படப்பிடிப்பில் உற்சாகமாக பங்கேற்று நடித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment