இனி தனக்குக் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்கு வழங்கப்போவதாக இளையராஜா கூறியுள்ளார். ரசிகர்களும் ஒரிஜனல் சிடிக்களை வாங்க வேண்டும், சட்ட விரோதமாக கிடைக்கும் விஷயங்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
உலகம் முழுவதும் எண்ணற்ற இசை ரசிகர்களைக் கொண்டவர் இளையராஜா. பல்வேறு மொழிகளில் இசையமைத்து, ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இளையராஜா, இப்போது அவரது ரசிகர் மன்றங்களை ‘இளையராஜா ஃபேன்ஸ் கிளப்’ என்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
அவருடைய மனைவி ஜீவாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள டிரஸ்ட் மூலம் பண்ணைபுரத்தில் பள்ளியைக் கட்ட ஆரம்பித்துள்ளார்.
சமூக சேவையில் முழுமையாக ஈடுபட வசதியாக நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ரசிகர் மன்றங்களை ‘இளையராஜா ஃபேன்ஸ் கிளப்’ கீழ் இணைக்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.
அந்தநிகழ்ச்சியில் இனி தனக்குக் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்கு வழங்கப் போவதாகவும் இளையராஜா அறிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment