உலகில் இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ப தினமும் ஒரு புது படைப்புகள் உதயமாகி கொண்டிருக்கிறது. இதில், இன்றைய அத்தியாவசிய தேவையாகிப் போன, மொபைல் போன்களில் பல வசதிகள் கொண்டு தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதில், தற்போது 'ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்' போன்களுக்கான மவுசு அதிகரித்து கொண்டே போகிறது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் வசதியுடன் வரும் ஸ்மார்ட் போன்களுக்கு மக்களிடம் எப்போதும் ஆதரவு இருக்கும். இவற்றின் ஆதிக்கத்தால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவந்த போன்களின் விற்பனை சரிந்தது.
நோக்கியா நிறுவன செல்போன்களின் விற்பனை சரிந்து பலத்த அடி வாங்கியது. அப்போதும், நோக்கியா நிறுவனம் தனது தயாரிப்புகளில் 'ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் வசதியை புகுத்தாமல் இருந்ததால் தொடர்ந்து விற்பனை குறைந்தது. பொறுமையிழந்த நோக்கியா, தனது முடிவை மாற்றி தற்போது, அனைவரிடமும் வரவேற்பு பெற்ற 'ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை' தங்களது தயாரிப்புகளில் புகுத்தியது.
இதிலும், மக்களுக்கு திருப்தி கிடைக்கவில்லை, என்று நோக்கியா நிறுவனம் உணர்ந்தது. அதேசமயம் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய லூமியா வகை போன்கள் மக்களிடையே வரவேற்பு பெற தொடங்கியது. இதை, உணர்ந்த நோக்கியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து 'விண்டோஸ் 8.1' ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய லூமியா 630 செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போன் 4.5 அங்குலம் நீளமும், 143 கிராம் எடையும் கொண்டது. இதில், இரு சிம்கார்டுகள் பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஸ்மார்ட் சிம்கார்ட் என்ற புதிய தொழில்நுட்பம் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு சிம்கார்டில் பேசும் போது, இரண்டாவது சிம்கார்டில் போன் வந்தால் எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதில், 1.2 ஜிகாஹர்ட்ஸ் புராஸசர், 5 மெகாபிக்சல் கேமரா, ஒட் டச் அப்ளிகேஷன் லான்ச் வசதி, பேட்டரியை சேமிக்க சென்சார் கோர் என பல்வேறு வசதிகள் இதில் அணிவகுக்கிறது.
வேகமாக டைப் செய்ய வசதியாக வோர்ட் பிரிடிக்டர், மோஷன்ஸ் இதில் உள்ளது.
இன்பில்டாக 8 ஜிபி மெமரி கொண்ட இந்த போனில் 128 ஜிபி வரை நீட்டித்து கொள்ளும் வசதியும் உள்ளது. சிங்கிள் சிம் மற்றும் டபுள் சிம் மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டபுள் சிம்கார்டு வசதி கொண்ட போனை நோக்கியா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பாலாஜி அறிமுகப்படுத்தினார். இதன் விலை ரூ. 11 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் சிங்கிள் சிம் வசதி கொண்ட போன்களின் விலை ரூ. 10 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த போன்கள் சந்தையில் அணிவகுக்க உள்ளன.
டிரஷர் டேக்:
இன்றைய நிலையில் செல்போன்களில் பேசுவதால், ஏற்படும் கவன சிதறலால், பலவற்றை இழக்க நேரிடுகிறது. இந்த பிரச்னைகளை தவிர்க்க சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் டிரஷார் டேக். சிறிய சாவி அளவிலான இந்த டிரஷர் டேகை, நாம் கொண்டு செல்லும் உடமைகளுடன் இணைத்து விட்டால், அந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தை கடந்தால் உடனே செல்போனில் உங்களுக்கு எச்சரிக்கை ஓசை ஒலிக்கும். இந்த வசதி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நோக்கியா லூமியா 630 போனில் உள்ளது.
இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இனிவரும் காலத்தில் மேலும் பல வசதிகள் புகுத்த நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இழந்த இடத்தை மீண்டும் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் நோக்கியா நிறுவனம் பயணத்தை தொடங்கியுள்ளது.

0 comments:
Post a Comment