நடிகை ஜோதிகா 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.தமிழில் அஜீத்தின் ‘வாலி’ படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. பிறகு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘முகவரி’, ‘காக்க காக்க’, ‘மொழி’ உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
இவரும் நடிகர் சூர்யாவும் காதலித்து வந்தனர் 2006&ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு குழந்தைகளை கவனித்து வந்த ஜோதிகா, 8 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மஞ்சு வாரியர் நடித்து வெளியான படம், ‘ஹவ் ஓல்ட் ஆர் யு’. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் குஞ்சாகோ போபன், கனிகா, லாலு அலெக்ஸ் உட்பட பலர் நடித்த இந்தப் படம் கேரளாவில் பலத்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து இது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். மலையாள படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இதையும் இயக்குகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறது.

8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜோதிகா!
ReplyDelete